Please wait...

Oliveboard

TNPSC Group -2 Study Plan in Tamil- 2 Month Study Plan

TNPSC Group -2 Study Plan in Tamil – TNPSC குரூப் 2 தேர்வு – 2 மாத பயில்தல் திட்டம் 2022: 2022-ஆம் ஆண்டுக்கான TNPSC குரூப் 2 தேர்வு அறிவிப்பைப் பிப்ரவரி 23, 2022 அன்று TNPSC வெளியிட்டுள்ளது. தேர்வு எழுத ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23 மார்ச் 2022 வரை விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு 21 மே 2022 அன்று நடத்தப்படும். தேர்வுக்குத் தயாராகும் உங்களுக்கு உதவ, நாங்கள் TNPSC குரூப் 2 தேர்வு – 2 மாத பயில்தல் திட்டம் 2022 என்ற ஒன்றுடன் வந்துள்ளோம். பயில்தல் குறித்து பார்ப்பதற்கு முன், TNPSC குரூப் 2 தேர்வு முறையை முதலில் பார்ப்போம்.

TNPSC குரூப் 2 தேர்வு மாதிரி 2022

TNPSC குரூப் 2 தேர்வு 3 கட்டங்களாக நடத்தப்படும்:

  1. முதல்நிலைத் தேர்வு
  2. முதன்மைத் தேர்வு: இது தாள் I மற்றும் தாள் II என 2 தாள்களைக் கொண்டிருக்கும்.
  3. நேர்முகத் தேர்வு
தேர்வு நிலைதேர்வு நடத்தப்படும் நேரம்அதிகபட்ச மதிப்பெண்கள்தகுதி பெற எடுக்க வேண்டிய மதிப்பெண்கள்
முதல்நிலைத் தேர்வு3 மணி நேரம் (180 நிமிடங்கள்)300 மதிப்பெண்கள்90 மதிப்பெண்கள்
முதன்மைத் தேர்வு தாள் – I3 மணி நேரம் (180 நிமிடங்கள்)100 மதிப்பெண்கள்40 மதிப்பெண்கள்
முதன்மைத் தேர்வு தாள் – II3 மணி நேரம் (180 நிமிடங்கள்)300 மதிப்பெண்கள்90 மதிப்பெண்கள்
நேர்முகத் தேர்வு 40 மதிப்பெண்கள் (குரூப் II தேர்வுக்கு மட்டுமே பொருந்தும். குரூப் II A இடங்களுக்கு நேர்முகத் தேர்வு இல்லை)

TNPSC குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முறை

  1. TNPSC முதல்நிலைத் தேர்வு என்பது ஒரு கொள்குறி வகை பன்முகத் தெரிவு வினா (MCQs) கொண்ட தேர்வாக இருக்க வேண்டும்.
  2. மொத்த கேள்விகள் 200 ஆகும்.
பாடம் நேரம்அதிகபட்ச மதிப்பெண்கள்
பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் (S.S.L.C. தரநிலை) (100 கேள்விகள்)
+
பொதுப் படிப்புகள் (பட்டப்படிப்பு தரநிலை) (75 கேள்விகள்)
+
பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையத் தேர்வு (S.S.L.C. தரநிலை) (25 கேள்விகள்)
மொத்தம் – 200 கேள்விகள்
3 மணி நேரம்300

TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு முறை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 முதன்மைத் தேர்வு, 2 தாள்களைக் கொண்டிருக்கும்:

TNPSC குரூப் 2 முதன்மைத் தாள் I

பாடம்நேரம்அதிகபட்ச மதிப்பெண்கள்அனைத்து சமூகத்தினரும் தகுதிபெற எடுக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள்
தமிழ் மொழித் தகுதித் தாள் – கட்டாயம்
(SSLC தரநிலை)
(விரிந்துரைக்கும் வகை)
1. (அ) தமிழ் – ஆங்கிலம் மொழிபெயர்ப்பு
(ஆ) ஆங்கிலம் – தமிழ் மொழிபெயர்ப்பு
2. சுருக்கி வரைதல்
3. பொருள் உணர்திறன்
4. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்
5. திருக்குறள் சார்ந்து கட்டுரை வரைதல்
6. கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது)
7. தமிழ் மொழியறிவு
3 மணி நேரம்10040

TNPSC குரூப் 2 முதன்மைத் தாள் II

பாடம்நேரம்அதிகபட்ச மதிப்பெண்கள்அனைத்து சமூகத்தினரும் தகுதிபெற எடுக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள்
பொதுப் படிப்புகள்
(பட்டப்படிப்பு தரநிலை)
(விரிந்துரைக்கும் வகை)
3 மணி நேரம்30090

3 மாத TNPSC குரூப் 2 படிப்புத் திட்டம் 2022

TNPSC குறித்த அறிவைப் பெற மிகவும் சாதகமான முறை, உண்மையாகவே TNPSC தாள்களை ஆராய்வதும் தரமான ஒத்திகை பயிற்சிகளைச் செய்து பார்ப்பதுமாகும். TNPSC தேர்வில் தலைசிறந்து விளங்குபவர்களால் அளிக்கப்பட்ட இந்தக் கட்டுரை, TNPSC அணுகுமுறையைப் பற்றிய நுண்ணறிவுகளை உங்களுக்கு வழங்கும். ஆனால் இதே அட்டவணையோ அல்லது திட்டமோ எல்லோருக்கும் சரியாக அமைந்துவிடாது. எனவே, 3 மாதங்களுக்குள் TNPSC குறித்த உங்களின் பலம் மற்றும் பலவீனம் எதுவென்பதை உங்களின் தனிப்பயனாக்கப்பட்ட திட்டத்தை உருவாக்குவதன் மூலமாக அறிந்து, அதன்படி செயல்படவும் அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் 3 மாத TNPSC படிப்புத் திட்டத்தின் அவுட்லைன் இங்கே உள்ளது.

படிக்க வேண்டிய நாட்கள்60
ஒவ்வொரு நாளும் படிப்பதற்கு பரிந்துரைக்கப்படும் நேரம்8 மணி நேரம்
வாரந்தோறும் நடத்தப்படும் முழு மாதிரி தேர்வு1-2
வாரந்தோறும் நடத்தப்படும் பிரிவு சார்ந்த தேர்வு1-2

இலவச மாதிரி தேர்வை இங்கே முயற்சிக்கவும்

வாராந்திர TNPSC குரூப் 2 படிப்புத் திட்டம் 2022

இந்த வாராந்திர படிப்புத் திட்டத்தின் அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் விரிவான கால அட்டவணையை உருவாக்க வேண்டும். அப்போது தான், முழு பாடத்திட்டத்தையும் முடிக்க முடியும்.

வாரம்காலை – 9 amமாலை – 1 pmஇரவு – 8 pm
வாரம் 1இந்திய புவியியல்இந்திய வரலாறு
மாதிரி தேர்வு -1 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -1
நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையது
வாரம் 2இந்திய & தமிழ்நாட்டின் புவியியல்இந்திய & தமிழ்நாட்டின் வரலாறு
மாதிரி தேர்வு -2 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -2
நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையது
வாரம் 3இந்திய பொருளாதாரம்இந்திய அரசியல்மாதிரி தேர்வு -3 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -3நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையது
வாரம் 4இந்திய & தமிழ்நாட்டின் பொருளாதாரம்இந்திய அரசியல்மாதிரி தேர்வு -4 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -4நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையது
வாரம் 5இந்தியாவின் கலாச்சாரம்தமிழ்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்மாதிரி தேர்வு -5 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -5நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையது
வாரம் 6இந்திய தேசிய இயக்கம் மற்றும்
உங்கள் விருப்பத் தலைப்புகளின் மறு ஆய்வு
தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் நிர்வாகம்
மாதிரி தேர்வு -6 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -6
நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையது
வாரம் 7பொது அறிவியல் மற்றும் உங்கள் விருப்பத் தலைப்புகளின் மறு ஆய்வு
மாதிரி தேர்வு -7 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -7
மாதிரி தேர்வு -8
மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -8
நடப்பு விவகாரங்கள் மறு ஆய்வு மற்றும் பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையது
வாரம் 8
உங்கள் விருப்பத் தலைப்புகளின் மறு ஆய்வு
மாதிரி தேர்வு -9 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -9
மாதிரி தேர்வு -10
மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -10
நடப்பு விவகாரங்கள் மறு ஆய்வு மற்றும் பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையது

TNPSC தேர்வுக்கான முக்கிய தயாரிப்பு குறிப்புகள் மற்றும் தயாரிப்பு யோசனைகள் – இங்கே சரிபார்க்கவும்

TNPSC குரூப் 2-இன் முழுமையான படிப்பு விவரங்கள்

TNPSC குரூப் 2 தேர்வுத் தொடரில் பின்வருவனவை அடங்கும்:

இலவசமாக TNPSC குரூப் 2 மாதிரி தேர்வைப் பயிற்சி செய்து பார்க்கவும்

OLIVEBOARD ஆப்-ஐ உடனடியாக டவுன்லோடு செய்து, தற்போதைய தேர்வுக்கு தங்களைத் தயார் செய்துக்கொள்ளலாமே

பதிவு செய்வதற்கு முன் பாடம் மற்றும் உள்ளடக்கம் குறித்து மதிப்பிட காணொளிகள், மாதிரி தேர்வுகள் மற்றும் பொது அறிவு தேர்வுகளைக் காணலாம்! அதுவும் இலவசமாக!

2 மாதங்களில் TNPSC தேர்வுக்கு தயாராவதற்கான உதவிக்குறிப்புகள்

சுயமாக படித்தல் vs பயிற்சி வகுப்புகள்

TNPSC தேர்வுக்கு தானாக படிப்பதன் மூலமாக வெற்றி பெற முடியுமா? பதில், நிச்சயமாக முடியும் என்பது தான். TNPSC தேர்வுக்கு தேவையான பயிற்சி மற்றும் விடாமுயற்சி மூலமாக உங்களால் நிச்சயம் முடியும். எனவே, விருப்பம் உங்கள் கையில். நீங்கள் ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிலலாம் அல்லது சொந்தமாக கேள்விகளுக்கான விடையை தேடி கடினமாக பயணிக்கலாம். நீங்கள் எவ்வளவு நேரத்தில் வேகமாக பதில் அளிக்கிறீர்கள் என்றும், உங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு விவேகத்துடன் செயல்படவும், மீண்டும் மீண்டும் விடாமல் உழைக்கவும் மறவாதீர்கள். உங்களை TNPSC தேர்வுக்கு தயார்ப்படுத்திக்கொள்வதற்கு தேவையான அனைத்து புத்தகங்களும் கடல் போல இணையத்தில் நிரம்பி வழிகிறது.

Oliveboard மாதிரி தேர்வுகள் ஏன் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்?

இந்த TNPSC Group -2 Study Plan in Tamil-இல் என்னவெல்லாம் சிறப்பம்சம் எங்களிடம் உள்ளது என்பதை நீங்கள் அறிந்துக்கொண்டீர்கள். மேலும் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலைப் பெற, Oliveboard ஆப்-ஐ உடனடியாக டவுன்லோடு செய்யவும்!