TNPSC Group -2 Study Plan in Tamil – TNPSC குரூப் 2 தேர்வு – 2 மாத பயில்தல் திட்டம் 2022: 2022-ஆம் ஆண்டுக்கான TNPSC குரூப் 2 தேர்வு அறிவிப்பைப் பிப்ரவரி 23, 2022 அன்று TNPSC வெளியிட்டுள்ளது. தேர்வு எழுத ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23 மார்ச் 2022 வரை விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு 21 மே 2022 அன்று நடத்தப்படும். தேர்வுக்குத் தயாராகும் உங்களுக்கு உதவ, நாங்கள் TNPSC குரூப் 2 தேர்வு – 2 மாத பயில்தல் திட்டம் 2022 என்ற ஒன்றுடன் வந்துள்ளோம். பயில்தல் குறித்து பார்ப்பதற்கு முன், TNPSC குரூப் 2 தேர்வு முறையை முதலில் பார்ப்போம்.
TNPSC குரூப் 2 தேர்வு மாதிரி 2022
TNPSC குரூப் 2 தேர்வு 3 கட்டங்களாக நடத்தப்படும்:
- முதல்நிலைத் தேர்வு
- முதன்மைத் தேர்வு: இது தாள் I மற்றும் தாள் II என 2 தாள்களைக் கொண்டிருக்கும்.
- நேர்முகத் தேர்வு
தேர்வு நிலை | தேர்வு நடத்தப்படும் நேரம் | அதிகபட்ச மதிப்பெண்கள் | தகுதி பெற எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் |
---|---|---|---|
முதல்நிலைத் தேர்வு | 3 மணி நேரம் (180 நிமிடங்கள்) | 300 மதிப்பெண்கள் | 90 மதிப்பெண்கள் |
முதன்மைத் தேர்வு தாள் – I | 3 மணி நேரம் (180 நிமிடங்கள்) | 100 மதிப்பெண்கள் | 40 மதிப்பெண்கள் |
முதன்மைத் தேர்வு தாள் – II | 3 மணி நேரம் (180 நிமிடங்கள்) | 300 மதிப்பெண்கள் | 90 மதிப்பெண்கள் |
நேர்முகத் தேர்வு | 40 மதிப்பெண்கள் (குரூப் II தேர்வுக்கு மட்டுமே பொருந்தும். குரூப் II A இடங்களுக்கு நேர்முகத் தேர்வு இல்லை) | |
TNPSC குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முறை
- TNPSC முதல்நிலைத் தேர்வு என்பது ஒரு கொள்குறி வகை பன்முகத் தெரிவு வினா (MCQs) கொண்ட தேர்வாக இருக்க வேண்டும்.
- மொத்த கேள்விகள் 200 ஆகும்.
பாடம் | நேரம் | அதிகபட்ச மதிப்பெண்கள் |
---|---|---|
பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் (S.S.L.C. தரநிலை) (100 கேள்விகள்) + பொதுப் படிப்புகள் (பட்டப்படிப்பு தரநிலை) (75 கேள்விகள்) + பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையத் தேர்வு (S.S.L.C. தரநிலை) (25 கேள்விகள்) மொத்தம் – 200 கேள்விகள் | 3 மணி நேரம் | 300 |
TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு முறை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 முதன்மைத் தேர்வு, 2 தாள்களைக் கொண்டிருக்கும்:
- தாள்-I – 100 மதிப்பெண்கள் – 3 மணி நேரம் (180 நிமிடங்கள்)
- தாள்-II – 300 மதிப்பெண்கள் – 3 மணி நேரம் (180 நிமிடங்கள்)
TNPSC குரூப் 2 முதன்மைத் தாள் I
பாடம் | நேரம் | அதிகபட்ச மதிப்பெண்கள் | அனைத்து சமூகத்தினரும் தகுதிபெற எடுக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் |
---|---|---|---|
தமிழ் மொழித் தகுதித் தாள் – கட்டாயம் (SSLC தரநிலை) (விரிந்துரைக்கும் வகை) 1. (அ) தமிழ் – ஆங்கிலம் மொழிபெயர்ப்பு (ஆ) ஆங்கிலம் – தமிழ் மொழிபெயர்ப்பு 2. சுருக்கி வரைதல் 3. பொருள் உணர்திறன் 4. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் 5. திருக்குறள் சார்ந்து கட்டுரை வரைதல் 6. கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது) 7. தமிழ் மொழியறிவு | 3 மணி நேரம் | 100 | 40 |
TNPSC குரூப் 2 முதன்மைத் தாள் II
பாடம் | நேரம் | அதிகபட்ச மதிப்பெண்கள் | அனைத்து சமூகத்தினரும் தகுதிபெற எடுக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் |
---|---|---|---|
பொதுப் படிப்புகள் (பட்டப்படிப்பு தரநிலை) (விரிந்துரைக்கும் வகை) | 3 மணி நேரம் | 300 | 90 |
3 மாத TNPSC குரூப் 2 படிப்புத் திட்டம் 2022
TNPSC குறித்த அறிவைப் பெற மிகவும் சாதகமான முறை, உண்மையாகவே TNPSC தாள்களை ஆராய்வதும் தரமான ஒத்திகை பயிற்சிகளைச் செய்து பார்ப்பதுமாகும். TNPSC தேர்வில் தலைசிறந்து விளங்குபவர்களால் அளிக்கப்பட்ட இந்தக் கட்டுரை, TNPSC அணுகுமுறையைப் பற்றிய நுண்ணறிவுகளை உங்களுக்கு வழங்கும். ஆனால் இதே அட்டவணையோ அல்லது திட்டமோ எல்லோருக்கும் சரியாக அமைந்துவிடாது. எனவே, 3 மாதங்களுக்குள் TNPSC குறித்த உங்களின் பலம் மற்றும் பலவீனம் எதுவென்பதை உங்களின் தனிப்பயனாக்கப்பட்ட திட்டத்தை உருவாக்குவதன் மூலமாக அறிந்து, அதன்படி செயல்படவும் அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் 3 மாத TNPSC படிப்புத் திட்டத்தின் அவுட்லைன் இங்கே உள்ளது.
படிக்க வேண்டிய நாட்கள் | 60 |
ஒவ்வொரு நாளும் படிப்பதற்கு பரிந்துரைக்கப்படும் நேரம் | 8 மணி நேரம் |
வாரந்தோறும் நடத்தப்படும் முழு மாதிரி தேர்வு | 1-2 |
வாரந்தோறும் நடத்தப்படும் பிரிவு சார்ந்த தேர்வு | 1-2 |
இலவச மாதிரி தேர்வை இங்கே முயற்சிக்கவும்
வாராந்திர TNPSC குரூப் 2 படிப்புத் திட்டம் 2022
இந்த வாராந்திர படிப்புத் திட்டத்தின் அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் விரிவான கால அட்டவணையை உருவாக்க வேண்டும். அப்போது தான், முழு பாடத்திட்டத்தையும் முடிக்க முடியும்.
வாரம் | காலை – 9 am | மாலை – 1 pm | இரவு – 8 pm |
வாரம் 1 | இந்திய புவியியல் | இந்திய வரலாறு மாதிரி தேர்வு -1 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -1 | நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையது |
வாரம் 2 | இந்திய & தமிழ்நாட்டின் புவியியல் | இந்திய & தமிழ்நாட்டின் வரலாறு மாதிரி தேர்வு -2 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -2 | நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையது |
வாரம் 3 | இந்திய பொருளாதாரம் | இந்திய அரசியல்மாதிரி தேர்வு -3 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -3 | நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையது |
வாரம் 4 | இந்திய & தமிழ்நாட்டின் பொருளாதாரம் | இந்திய அரசியல்மாதிரி தேர்வு -4 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -4 | நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையது |
வாரம் 5 | இந்தியாவின் கலாச்சாரம் | தமிழ்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்மாதிரி தேர்வு -5 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -5 | நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையது |
வாரம் 6 | இந்திய தேசிய இயக்கம் மற்றும் உங்கள் விருப்பத் தலைப்புகளின் மறு ஆய்வு | தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் நிர்வாகம் மாதிரி தேர்வு -6 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -6 | நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையது |
வாரம் 7 | பொது அறிவியல் மற்றும் உங்கள் விருப்பத் தலைப்புகளின் மறு ஆய்வு | மாதிரி தேர்வு -7 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -7 மாதிரி தேர்வு -8 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -8 | நடப்பு விவகாரங்கள் மறு ஆய்வு மற்றும் பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையது |
வாரம் 8 | உங்கள் விருப்பத் தலைப்புகளின் மறு ஆய்வு | மாதிரி தேர்வு -9 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -9 மாதிரி தேர்வு -10 மற்றும் பிரிவு சார்ந்த தேர்வு -10 | நடப்பு விவகாரங்கள் மறு ஆய்வு மற்றும் பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தொடர்புடையது |
TNPSC தேர்வுக்கான முக்கிய தயாரிப்பு குறிப்புகள் மற்றும் தயாரிப்பு யோசனைகள் – இங்கே சரிபார்க்கவும்
TNPSC குரூப் 2-இன் முழுமையான படிப்பு விவரங்கள்
TNPSC குரூப் 2 தேர்வுத் தொடரில் பின்வருவனவை அடங்கும்:
- 20 TNPSC குரூப் 2 முழு பாடத்திட்ட மாதிரி தேர்வுகள்
- 10 TNPSC குரூப் 2 பாடம் வாரியான மாதிரி தேர்வுகள்
- ஆய்வுக் குறிப்புகள் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)
- மனநிலை வரைபடங்கள் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)
- படிப்பதற்கான இலவச மூலாதாரங்கள் & ஈ-புத்தக ஆதாரங்கள்
இலவசமாக TNPSC குரூப் 2 மாதிரி தேர்வைப் பயிற்சி செய்து பார்க்கவும்
OLIVEBOARD ஆப்-ஐ உடனடியாக டவுன்லோடு செய்து, தற்போதைய தேர்வுக்கு தங்களைத் தயார் செய்துக்கொள்ளலாமே
- காணொளி மூலம் பாடம் நடத்துதல், புத்தகத்தில் உள்ள பாடம் நடத்துதல் & குறிப்புகள் வழங்குதல்
- விரிவான தீர்வுகளுடன் அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கிய தேர்வுகள்
- QA, DI, EL, LR போன்றவற்றுக்கான பிரிவு தேர்வுகள்
- செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் அகில இந்திய சதவீதத்திற்கான அகில இந்திய மாதிரி தேர்வு
- பொது அறிவு (GK) தேர்வுகள்
பதிவு செய்வதற்கு முன் பாடம் மற்றும் உள்ளடக்கம் குறித்து மதிப்பிட காணொளிகள், மாதிரி தேர்வுகள் மற்றும் பொது அறிவு தேர்வுகளைக் காணலாம்! அதுவும் இலவசமாக!
2 மாதங்களில் TNPSC தேர்வுக்கு தயாராவதற்கான உதவிக்குறிப்புகள்
- மாதிரி தேர்வுகளை முயற்சிக்கும் முன் உங்கள் கருத்துக்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளவும்
- நிலையான பகுதி – இந்தப் பிரிவில் உள்ள தலைப்புகளின் கருத்தியல் அறிவின் மீது உங்களுக்கு குறிப்பிடத்தக்க தெளிவு இருக்க வேண்டும். தெளிவாக இருக்கவும், சுருக்கமான குறிப்புகளை உருவாக்கவும், மறு ஆய்வு செய்யவும், அடிக்கடி நினைவுபடுத்தவும் மறவாதீர்.
- நடப்பு நிகழ்வுகள் – தினமும் உங்களை அப்டேட் செய்து கொள்ளவும். தமிழ்நாடு அரசு தேர்வில் கேட்கப்படும் கேள்விகள், தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், தற்போதைய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருக்கும். மாநில அரசு தேர்வுகளில் குறிப்பிட்ட நடப்பு விவகார கேள்வி இருப்பதால் நாம் எதிர்பாராததாக இருக்கும். எனவே உங்கள் வெற்றியை உறுதி செய்ய, மாதாந்தோறும் நடக்கும் நிகழ்வுகள் குறித்த சுருக்கமான ஈ-புத்தகத்தை வைத்திருப்பதன் மூலமாக உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும்.
சுயமாக படித்தல் vs பயிற்சி வகுப்புகள்
TNPSC தேர்வுக்கு தானாக படிப்பதன் மூலமாக வெற்றி பெற முடியுமா? பதில், நிச்சயமாக முடியும் என்பது தான். TNPSC தேர்வுக்கு தேவையான பயிற்சி மற்றும் விடாமுயற்சி மூலமாக உங்களால் நிச்சயம் முடியும். எனவே, விருப்பம் உங்கள் கையில். நீங்கள் ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிலலாம் அல்லது சொந்தமாக கேள்விகளுக்கான விடையை தேடி கடினமாக பயணிக்கலாம். நீங்கள் எவ்வளவு நேரத்தில் வேகமாக பதில் அளிக்கிறீர்கள் என்றும், உங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு விவேகத்துடன் செயல்படவும், மீண்டும் மீண்டும் விடாமல் உழைக்கவும் மறவாதீர்கள். உங்களை TNPSC தேர்வுக்கு தயார்ப்படுத்திக்கொள்வதற்கு தேவையான அனைத்து புத்தகங்களும் கடல் போல இணையத்தில் நிரம்பி வழிகிறது.
Oliveboard மாதிரி தேர்வுகள் ஏன் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்?
- ஒப்பிட்டு சிறந்தவராக ஜொலித்திடுங்கள்: உங்களுடன் எழுதவிருக்கும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு உங்கள் செயல்திறனை முடிவு செய்யவும். அகில இந்திய அளவில் உங்கள் தரத்தை நிரூபிக்க உதவுகிறோம்.
- விளக்கத்துடன் சிறந்த தீர்வுகள் : அனைத்து கேள்விகளுக்கும் சிறந்த முறையில் தீர்வு காண Oliveboard உதவுகிறது.
- செயற்கை நுண்ணறிவு செயல்திறன் வசதி: உங்கள் முன்னேற்றத்தை நாங்கள் வரைபடமாக விளக்கி எளிய வகையில் புரிய வைக்கிறோம். நீங்கள் வாரந்தோறும் எவ்வளவு முன்னேறி இருக்கிறீர்கள், மாதந்தோறும் எவ்வளவு முன்னேறி இருக்கிறீர்கள், காலாண்டில் எவ்வளவு முன்னேறி இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் உங்களுக்கு வரைபடமாக விளக்குகிறோம்.
- நேர பகுப்பாய்வு: கேள்விக்கான பதில் அளிக்கும் கால அவகாசத்தை வழங்கி, நீங்கள் பதில் அளிக்கும் வேகத்தை மேம்படுத்த உதவுகிறோம்.
இந்த TNPSC Group -2 Study Plan in Tamil-இல் என்னவெல்லாம் சிறப்பம்சம் எங்களிடம் உள்ளது என்பதை நீங்கள் அறிந்துக்கொண்டீர்கள். மேலும் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலைப் பெற, Oliveboard ஆப்-ஐ உடனடியாக டவுன்லோடு செய்யவும்!
Oliveboard Live Courses & Mock Test Series
- Download IRDAI Assistant Manager PYQs
- Monthly Current Affairs 2024
- Download RBI Grade B PYQ PDF
- Download IFSCA Grade A PYQs
- Download SEBI Grade A PYQs
- Attempt Free SSC CGL Mock Test 2024
- Attempt Free IBPS Mock Test 2024
- Attempt Free SSC CHSL Mock Test 2024
- Download Oliveboard App
- Follow Us on Google News for Latest Update
- Join Telegram Group for Latest Govt Jobs Update
Also Check: TNPSC Group 4 Results 2024 Link